டெஸ்டிகுலர் டோர்ஷன் எனும் விதைப் பையில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர சிகிச்சை

Published By: Digital Desk 2

08 Oct, 2026 | 05:25 PM
image

உயிரணுக்களின் சேமிப்புக் கிடங்காக திகழும் விதைப்பையில் இயங்கும் விந்து குழாயும், ரத்த நாளங்களும் அரிதாகவும் எதிர்பாராத தருணத்தில் முறுக்கம் அடைவதை தான் மருத்துவ மொழியில் டெஸ்டிகுலர் டோர்ஷன் என குறிப்பிடுகிறார்கள்.

இது அவசர நிலையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை என்பதால், இவர்களுக்கு உடனடியாக நிவாரண சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

விதைப்பையில் ஏற்படும் விவரிக்க இயலாத மற்றும் தாங்க இயலாத வலி, விதை வீக்கம், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, தலை சுற்றல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று சிறுநீரக சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனையும் அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையையும் மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஆண்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படும் என்றாலும் எந்த வயதிலும் இத்தகைய பாதிப்பு உண்டாக கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இத்தகைய தருணத்தில் உயிரணுக்கள் குருதி சார்ந்த விநியோகத்தை துண்டித்துக் கொள்வதால்... உயிரணுக்களுக்கு குருதி ஓட்டம் கிடைக்காமல் பாதிப்பை உண்டாக்குகிறது.

இத்தகைய நிலை ஆறு மணி தியாலத்திற்குள் மீட்டெடுக்கப்படாவிட்டால்... உயிரணுக்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதன் காரணமாகவே சிலருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

இத்தகைய பாதிப்பு அரிதாக இருந்தாலும் தன்னிச்சையாக நிகழக்கூடியது. பெரும்பாலான ஆண்களின் இத்தகைய பாதிப்பு விதைப்பையின் இடது பகுதியில் ஏற்படுவதாகவும், வெகு சிலருக்கு மட்டுமே இரண்டு பகுதிகளில் உள்ள விதைப்பை பாதிக்கப்படுவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள். விதைப்பையில் ஏற்படும் காயம் காரணமாகவும், உயிரணுக்களில் ஏற்படும் விவரிக்க இயலாத பாதிப்பின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

இவர்களுக்கு விதைப்பை திசு பரிசோதனை ,பிரத்யேக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

வைத்தியர் ரவி தேஜா
தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூக்கடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை-...

2026-11-14 15:45:24
news-image

இரத்த நாள அடைப்பை நீக்கும் நவீன...

2026-11-13 15:26:37
news-image

பிட்யூற்றரி மேக்ரோஅடினோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-11-12 15:10:08
news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47
news-image

வாஸ்குலர் ரிங் எனும் பிறவி இதயக்...

2026-11-02 13:47:27
news-image

கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும்...

2026-10-31 14:40:04