ஊழல் எதிர்ப்பு சட்டத் திருத்தம் அரச அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது – முஜிபுர் ரஹ்மான்

Published By: Digital Desk 2

08 Oct, 2026 | 04:59 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு அரசாங்கம் கொண்டுவந்திருக்கும்  சில திருத்தங்கள் அரச அதிகாரிகள் ஊழலுக்கு ஆளாக முடியுமான பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. அதேநேரம் புதிய திருத்தம் சர்வதேச அளவுகோளுக்கு பொருத்தமி்ல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (08) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊழல் எதி்ர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கம் திருத்தம் கொண்டுவந்திருக்கும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்  நல்லாட்சி அரசாங்க காலத்தில் கொண்டுவரப்பட்டதாகும். இந்த சட்டத்துக்கு சர்வதேச ரீதியில் வரவேற்பு இருந்தது. இருந்தபோதும் தற்போது அரசாங்கம் இந்த சட்டமூலத்துக்கு சில திருத்தங்களை கொண்டுவந்திருக்கிறது. என்றாலும் அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் சில  திருத்தங்கள் பிரச்சினைக்குரியவை.

குறிப்பாக அரசாங்கம் இந்த சட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்களின்  சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதில்லை என்ற திருத்தத்தை கொண்டுவர கலந்துரையாடி வந்திருந்தது. ஏனெனில் அரசாங்கத்தில் இருக்கும்  அமைச்சர்கள் பலரின் சொத்துக்கள் தொடர்பான தகவல் வெளியில் வந்தபோது, அரசாங்கத்துக்குஅதனை மறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச ஊழியர்களை அதில் இருந்து பாதுகாக்கும் தற்காப்பு ஒன்று தேவைப்பட்டது. அதனடிப்படையிலே இந்த  இவ்வாறான திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் கலந்துரையாடல் ஏற்பட்டது. என்றாலும் மக்கள் மத்தியில் இது தொடர்பில் எதிர்ப்பு எழும்போாது, அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களை இதில் இருந்து நீக்கிவிட்டு, அரச ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதேநேரம் இந்த  திருத்தத்தில் அரச அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல் தொடர்பில்  நிழல் பிரதி எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அது  முறைப்பாடு செய்வதற்கு மாத்திரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரச அதிகாரிகளின் சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பில் யாருக்கும் ஆராய்ச்சி செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், ஒருலட்சம் தண்டப்பணத்துடன் ஒருவருட  சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த திருத்தம் மூலம் சர்வதேச அளவுகோள் மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படை தன்மை தொடர்பில்   சிக்கல் எழுவதாக சர்வதேச நாணய நிதியம் கூட அதிருப்தி வெளியிட்டிருக்கிறது. அதேநேரம் தண்டனைக்கு பயந்து அரச அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில்  தேடிப்பார்க்க யாரும் முன்வருவதில்லை. அதேநேரம் இந்த திருத்தம் ஊழலுக்கு  சாதகமாக அமைகிறது.

மேலும் தற்போது இருக்கும் ஊழல் எதிர்ப்பு  சட்டம் உலகில் இருக்கும் சிறந்த சட்டம் என தெரிவிக்கப்படும் நிலையில், ஏன் அரசாங்கம் இதனை திருப்புவதற்கு முயற்சி்க்கிறது என கேட்கிறோம்.  அரசாங்கம் இந்த சட்டத்தில் இவ்வாறான திருத்தம் கொண்டுவருவதன் முலம் அரச அதிகாரிகள் ஊழலுக்கு ஆளாகுவதற்கு முடியுமான பாதுகாப்பை அரசாங்கம் வழங்குகிறது.

அத்துடன் தற்பாது இருக்கும் சட்டத்தில் அரச நிறுவனங்களில்  நூற்றுக்கு 25வீதம் பங்கு இருப்பவர்கள் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் திருத்தத்தில் நூற்றுக்கு 25 வீதம் என்பதை நூற்றுக்கு 50 வீதத்துக்கு அதிக பங்கு இருப்பவர்களே  சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.

இந்த திருத்தத்தை கொண்டுவருவதன் தர்க்கம் என்ன? எனவே அரசாங்கம் ஊழலை ஒழிப்பதாக தெரிவித்து, தற்போது இந்த சட்டத்துக்கு கொண்டுவந்திருக்கும் சில திருத்தங்கள், ஊழல் மோசடிகளுக்கு இடமளிப்பதாக அமைந்துள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு செலவுத் திட்டத்தில் 'வளமான நாடும்...

2026-11-14 16:44:48
news-image

மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக்...

2026-11-14 16:44:15
news-image

கிளிப்பிள்ளை போல ஜனாதிபதி அறிவித்த வரவு...

2026-11-14 16:43:58
news-image

லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு குறித்து...

2026-11-14 16:24:22
news-image

80,000 வேலையில்லாப் பட்டதாரிகளை பயிலுநர்களாக அரச...

2026-11-14 17:58:04
news-image

வலுசக்தித் துறையில் நியாயமான சந்தைப் போட்டி...

2026-11-14 17:27:13
news-image

லாப்ஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை அதிகரிப்புக்கு...

2026-11-14 16:29:18
news-image

சர்ச்சைக்குரிய இரு சட்டமூலங்களையும் முழுமையாக மீளப்பெற...

2026-11-14 16:30:34
news-image

அதிபர் சேவையில் காணப்படும் சம்பள முரண்பாடு...

2026-11-14 16:30:03
news-image

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால்...

2026-11-14 16:21:41
news-image

சட்டவிரோத கடற்றொழில் ஊடாகவே 300 மில்லியன்...

2026-11-14 15:49:51
news-image

மூச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத...

2026-11-14 15:16:51