சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம் மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா

Published By: Digital Desk 2

08 Oct, 2026 | 04:47 PM
image

கார்த்திகேயன் நடராஜன்

தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தில் பிரசித்திபெற்ற அருள்மிகு தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் 33ஆவது ஆண்டு பூக்குழி திருவிழா ஒக்டோபர் 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

 இத்திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

திருவிழாவிற்கு முன்னதாக 11 நாட்கள் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று அதனை தொடர்ந்து பக்த மெய் அன்பர்களுக்கு பிரசாதங்கள் வழங்க பெற்றது. 

சுமார் 6வது தலைமுறையாக நடத்தி வரும் இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று தேவி ஸ்ரீ மாரியம்மனுக்கு மூன்று நாள் சிகர நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

முதல் சிகர நிகழ்வான அக்டோபர் 5ஆம் திகதி  மாலையில் தீச்சட்டி மற்றும் தீச்சட்டி காவடி ஊர்வலம் நடந்தது, அதனை தொடர்ந்து தேவி ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து பாட்டு கச்சேரி நிகழ்ச்சி அரங்கேறியது. 

சிகர நிகழ்வான இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை  காலை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரியை இறை பக்தியுடன் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

அதனை தொடர்ந்து மதிய அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.  மாலை 04.30 மணியளவில் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து குற்றால தீர்த்தம் தொடங்கபெற்று சுமார் 6மணி நேரம் ஊர் முழுவதும் வலம் வந்து இரவு 10.30 மணியளவில் அன்னை தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலுக்கு வந்து அடைந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று,  நள்ளிரவு 21அடி நீளம்  கொண்ட பூக்குழி அமைத்து அக்கினி வளர்க்கப்பட்டது. 

மூன்றாவது நாளான ஒக்டோபர் 7, அதிகாலை 5 மணியளவில் நாதஸ்வர நையாண்டி மேளம் முழங்க, நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, மக்கள் வெள்ளத்தில் 33வது ஆண்டு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. பூக்குழியினை காண வரும் பக்தர்களுக்கு வசதிக்காகவும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக கோவில் நுழைவாயிலில் அகண்ட LED திரை நிறுவப்பெற்றது.   

பின்னர் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்துதல், முளைப்பாரி கரைத்தல் அதனை தொடர்ந்து  மஞ்சள் பால் விளையாட்டு நடைபெற்று தொடர்ந்து அம்மனுக்கு மகா சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு முன்னதாக அன்னை ஸ்ரீமாரியம்மனும், மகன் ஸ்ரீ பைரவரும் பக்த மெய் அன்பர்களுக்கு கணி வழங்கி அருள் புரிவர்.  விழாவைக் காண அய்யாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவினை சிறப்பிக்கும் வகையில் கொக்கிரகுளம் மணிசங்கரம்மாள் வில்லிசை நிகழ்ச்சியும்,  புளியாரை நையாண்டி மேளமும் அரங்கேறியது. 

இந்த மூன்று (05, 06 மற்றும் 07) நாள் திருவிழா ஏற்பாடுகளை காவல் துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அய்யாபுரம் ஊர் நாட்டாண்மைகளும் பொதுமக்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வரும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தீயணைப்பு துறை மற்றும் மருத்துவ முதல் உதவி குழு தயார் நிலையில் வைக்கப்பட்டது.

மேலும் சிறப்பாக 5 நாள் கொடையாக அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு சித்திரை மாதத்திலும், மகன் ஸ்ரீ வைரவர்க்கு தை மாதத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ஐயப்ப சுவாமிமார்களின் விசா மற்றும்...

2026-11-14 09:49:11
news-image

ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்...

2026-11-14 04:38:35
news-image

அனைத்து ஆத்துமாக்கள் தின திருப்பலி

2026-11-13 09:56:02
news-image

19ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் 2027...

2026-11-12 16:54:04
news-image

அட்டனில் இன்று அமரர் இர. சிவலிங்கத்தின்...

2026-11-12 14:02:51
news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32