ஐங்கரன் ஃபிலிம் இன்டர்நேஷனல், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அபிநயா செல்வம், அசோக் செல்வன் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'அன்பில் அவன்' திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்கிறது.
இதனால் படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக் குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் நடிகரும், தயாரிப்பாளருமான அசோக் செல்வன் பேசுகையில், ':காதல் கதையாக தொடங்கி த்ரில்லர் - எக்சன் என பல ஜேனர்களில் பயணிக்கும் வகையில் உருவான 'அன்பில் அவன்' திரைப்படத்தை பட மாளிகையில் பார்த்து பலர் உணர்ச்சி வசப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்த படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் இதன் இதயமும், ஆன்மாவும் பொருத்தமான இடத்தை சென்றடைந்திருப்பதாக நம்புகிறேன். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி'' என்றார்.
கடந்த இரண்டாம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும், வரவேற்பும் தொடர்ந்து கிடைத்து வருவதால்.. படக் குழு உற்சாகமடைந்திருக்கிறது.
அத்துடன் இந்த திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுத்திருப்பதாகவும் திரையுலக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM