'டெலிவரி பாய் 'படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 2

08 Oct, 2026 | 03:28 PM
image

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான லியோ சிவகுமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டெலிவரி பாய்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி பிரத்யேக போஸ்டர் மூலம் படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌

இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகி உள்ள 'டெலிவரி பாய்' திரைப்படத்தில் லியோ சிவகுமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா சகா, காளி வெங்கட், ஜென்சன் திவாகர், போஸ் வெங்கட், துஷ்யந்த், உதயா தீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அசோக் குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ். குமார் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே .எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அசாசி கிரியேசன்ஸ் மற்றும் சாண்டி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அமுதா லியோனி மற்றும் லெனின் மாதேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கான மோசன் போஸ்டர், பாடல்கள், டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருந்த நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதி உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே 'தாய் கிழவி', 'விஸ்வநாத் & சன்ஸ்' ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகை ராதிகா சரத்குமார் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதால் இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்'...

2026-11-14 17:17:12
news-image

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'செங்குலம்'...

2026-11-14 17:17:02
news-image

நஸ்லென் நடிக்கும் 'பேச்சுலர் பார்ட்டி டீயெக்ஸ்'...

2026-11-14 17:16:07
news-image

தனுஷ்- மம்முட்டி நடிக்கும் 'ஓம்' படத்தின்...

2026-11-14 17:15:00
news-image

நடிகர் எஸ். பி. சித்தார்த் நடிக்கும்...

2026-11-14 16:29:30
news-image

கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் டி...

2026-11-14 16:27:22
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'ஸ்டேஷன்'...

2026-11-14 16:27:09
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின்...

2026-11-14 16:27:00
news-image

புதுமணத் தம்பதிகளான அனிருத் – காவியா...

2026-11-14 16:08:41
news-image

டைட்டானிக் ( காதலும் கவுந்து போகும்)...

2026-11-14 15:49:20
news-image

பிளாக் - Flag - திரைப்பட...

2026-11-14 15:41:56
news-image

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை...

2026-11-13 15:28:17