மக்களின் மனதை மாற்றும் வல்லமை கொண்டது சினிமா - கார்த்திக் சுப்புராஜ்

Published By: Digital Desk 2

08 Oct, 2026 | 03:16 PM
image

'சினிமா வலிமையான ஆயுதம். அது மக்களின் மனதை மாற்றும் வல்லமை கொண்டது' என இயக்குநரும் , தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

சிக்யா என்டர்டைன்மென்ட் , தம்மம் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின்  தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் ஜியோ ஸ்டுடியோ வழங்கும் 'டோரதி' திரைப்படம் படமாளிகையில் வெளியானது.

பாலின சிறுபான்மையோரின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

இதனால் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக் குழு நன்றி தெரிவித்துள்ளனர். இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர்கள் மிஷ்கின், வசந்த பாலன், சசி, லிங்குசாமி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், '' நாம் இதுவரை பார்த்து வந்த திருநர் சமூகத்தை பற்றிய பார்வையை இந்த திரைப்படம் நிச்சயம் மாற்றும் என பலரும் எம்மிடம் சொன்னார்கள்.

அதுதான் இந்த படைப்பின் வெற்றி என கருதுகிறேன். இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலம். அத்துடன் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்'...

2026-11-14 17:17:12
news-image

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'செங்குலம்'...

2026-11-14 17:17:02
news-image

நஸ்லென் நடிக்கும் 'பேச்சுலர் பார்ட்டி டீயெக்ஸ்'...

2026-11-14 17:16:07
news-image

தனுஷ்- மம்முட்டி நடிக்கும் 'ஓம்' படத்தின்...

2026-11-14 17:15:00
news-image

நடிகர் எஸ். பி. சித்தார்த் நடிக்கும்...

2026-11-14 16:29:30
news-image

கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் டி...

2026-11-14 16:27:22
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'ஸ்டேஷன்'...

2026-11-14 16:27:09
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின்...

2026-11-14 16:27:00
news-image

புதுமணத் தம்பதிகளான அனிருத் – காவியா...

2026-11-14 16:08:41
news-image

டைட்டானிக் ( காதலும் கவுந்து போகும்)...

2026-11-14 15:49:20
news-image

பிளாக் - Flag - திரைப்பட...

2026-11-14 15:41:56
news-image

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை...

2026-11-13 15:28:17