தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகல்

08 Oct, 2026 | 12:37 PM
image

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா, அணித்தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான தனது முடிவை இலங்கை கிரிக்கெட் (SLC) தேசிய தெரிவுக்குழுவுக்கு எழுதிய கடிதம் மூலம் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் அணியின் தலைமைத்துவப் பொறுப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தலைமைத்துவப் பொறுப்பு அடுத்த தலைமுறைக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது உண்மையான கருத்தாகும்” என தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள போதிலும், இலங்கை அணிக்காக வீரராக தொடர்ந்து விளையாடுவதற்கு தாம் தயாராக இருப்பதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனஞ்சய டி சில்வாவின் தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் எஞ்சிய காலத்திற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, “அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் எஞ்சிய காலத்துக்கு இலங்கை கிரிக்கெட் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், டெஸ்ட் அணிக்கு அவர் வழங்கிய தலைமைத்துவத்திற்கும் நன்றி தெரிவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை டெஸ்ட் அணியின் அடுத்த அணித்தலைவர் யார் என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா - பூட்டான், பங்களாதேஷ் -...

2026-11-14 11:47:31
news-image

இந்தியாவை துவம்சம் செய்து  இரண்டாவது   மிகப்...

2026-11-14 06:39:43
news-image

மகளிர் முன்னேறிவரும் நாடுகள் கிரிக்கெட: ஸ்கொட்லாந்தை...

2026-11-14 04:23:55
news-image

இலங்கையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டியை...

2026-11-14 04:20:49
news-image

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல்,...

2026-11-12 16:45:31
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான  முதலாவது   டெஸ்ட் போட்டியில்...

2026-11-12 04:30:02
news-image

இங்கிலாந்திலிருந்து அழைக்கப்பட்ட ஹம்சா, பர்ஹான் ஆகியோர்...

2026-11-12 04:17:39
news-image

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி ;...

2026-11-11 16:08:40
news-image

நாங்கள் விளையாடுவது கால்பந்தாட்டம், கிரிக்கெட் அல்ல,...

2026-11-11 11:37:01
news-image

இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்...

2026-11-11 06:24:07
news-image

அறிமுக வீரர்கள் மூவர் குவித்த அரைச்...

2026-11-10 19:32:54
news-image

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான...

2026-11-10 00:21:02