சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையம் மற்றும் தலைநகர் ரியாத்திலுள்ள சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையம் மற்றும் ரியாத்திலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 36 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளதாவது,
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இடம்பெற்ற தாக்குதல்களில், அப்ஹா விமான நிலையத்தில் மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவைச் சேர்ந்த இரு பெண்களும், ரியாத் விமான நிலையத்தில் சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் இரு வெளிநாட்டுப் பெண்கள் உயிரிழந்ததுடன், 28 பேர் காயமடைந்துள்ளனர். புதன்கிழமை மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து சவூதி பிரஜைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
ரியாத்தின் வடக்குப் பகுதியில் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சவூதி கூட்டுப் படைகள் இடைமறித்து அழித்ததாகவும், யேமன் தலைநகர் சனாவில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை ஏவுதளத்தையும் அழித்ததாகவும் சவூதி மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரியாத் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள அராம்கோ எரிபொருள் சேமிப்பு பகுதிகளுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சவூதியில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு அமெரிக்கத் தூதரகம் அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM