இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE Expo 2026 கண்காட்சி

07 Oct, 2026 | 04:59 PM
image

(நமது நிருபர்)

கொழும்பில் ஆரம்பமான MICE Expo 2026 கண்காட்சியின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், இதனூடாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கான புதிய வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (06) ஆரம்பமான இக்கண்காட்சியில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், இலங்கையின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழிற்துறைப் பங்குதாரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உலகளாவிய ரீதியில் 26 நாடுகளைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட சுற்றுலாத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகத்துறை பிரதிநிதிகள் பங்கேற்கும் இக்கண்காட்சி, கூட்டங்கள், பயணங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுக்கான முன்னணித் தளமாக இலங்கையை முன்னிறுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் என அமைச்சர் விஜித்த ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிக்கக்கூடிய, பொருளாதாரத்துக்குப் பரந்துபட்ட அளவில் பங்களிப்புச்செய்யக்கூடிய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே எமது முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த கண்காட்சியின் வர்த்தக - வர்த்தக செயற்திட்டத்தின்கீழ் 10,000 க்கும் மேற்பட்ட வர்த்தக ரீதியான சந்திப்புக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இது வணிகக் கூட்டாண்மை மற்றும் சர்வதேச மட்டத்திலான வாய்ப்புக்களை வலுப்படுத்துவதற்குப் பங்களிப்புச் செய்யும் என்றும் அமைச்சர் விஜித்த ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ஐயப்ப சுவாமிமார்களின் விசா மற்றும்...

2026-11-14 09:49:11
news-image

ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்...

2026-11-14 04:38:35
news-image

அனைத்து ஆத்துமாக்கள் தின திருப்பலி

2026-11-13 09:56:02
news-image

19ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் 2027...

2026-11-12 16:54:04
news-image

அட்டனில் இன்று அமரர் இர. சிவலிங்கத்தின்...

2026-11-12 14:02:51
news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32