அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான ஜன­நா­யகக் கட்சி மற்றும் குடி­ய­ரசுக் கட்­சியின் வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கான ஆரம்ப கட்ட வாக்­கெ­டுப்பு அயோவா மாநி­லத்தில் இன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­கி­றது.

இந்­நி­லையில் அமெ­ரிக்க நியூயோர்க் டைம்ஸ் ஊட­க­மா­னது ஜன­நா­யகக் கட்­சியின் வேட்­பா­ள­ரான ஹிலாரி கிளின்­ட­னுக்கும் குடி­ய­ரசுக் கட்­சியைச் சேர்ந்த வேட்­பாளர் ஜோன் கஸிச்­சிற்கும் தனது ஏற்­பா­த­ரவை வழங்­கி­யுள்­ளது.

நவீன வர­லாற்றில் மிகவும் பரந்­த­ள­வான தகு­தியைக் கொண்ட வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ராக ஹிலாரி கிளின்டன் உள்­ள­தாக அந்தப் பத்­தி­ரிகை குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­துடன் குடி­ய­ரசுக் கட்­சியைச் சேர்ந்த ஜோன் கஸிச்சும் அந்தக் கட்­சிக்­கான ஒரே தெரி­வாக உள்­ள­தாக அந்த பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது.

நியூயோர்க் டைம்ஸ் ஹிலாரி கிளின்­ட­னுக்கு ஏற்­க­னவே 2008 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­கான வாக்­கெ­டுப்பின் போதும் ஏற்­பா­த­ரவை வழங்­கி­யி­ருந்­தது.

அந்த வாக்­கெ­டுப்பில் ஹிலாரி, பராக் ஒபா­மா­விடம் தோல்வி கண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாத நிலைக்கு உள்­ளானார்.

அதே­ச­மயம் ஹிலாரி கிளின்­டனின் கட்­சியைச் சேர்ந்த அவ­ரது பிர­தான போட்­டி­யா­ள­ரான பெர்னி சான்­டர்­ஸுக்கும் பாராட்­டு­களைத் தெரி­வித்­துள்ள அந்தப் பத்­தி­ரிகை, அவ­ருக்கு ஹிலா­ரி­யுடன் ஒப்­பி­டு­கையில் அனு­பவம் குறை­வா­க­வுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும் குடி­ய­ரசுக் கட்­சியின் சர்ச்­சைக்­கு­ரிய வேட்­பா­ள­ரான டொனால்ட் டிரம்­பிற்கு அர­சியல் அனு­ப­வமோ அல்­லது தேசிய பாது­காப்பு மற்றும் உலக வர்த்­தகம் என்­பன தொடர்பில் அறிந்து கொள்ளும் ஆர்­வமோ கிடை­யாது என அந்தப் பத்திரிகை குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில் ஜோன் கஸிச், நியூயோர்க் டைம்ஸ் ஊடகத்தின் ஆதரவு தனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதையிட்டு பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.