உலகளவில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு பிறக்கும் போதே பாத அமைப்பில் குறைபாட்டுடன் பிறக்கிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட நல்வாழ்வு பெற வேண்டிய பச்சிளம் குழந்தைகள் இத்தகைய பிறவி பாத குறைபாட்டுடன் பிறப்பதாகவும், இதற்கு மருத்துவர்கள் பிரத்யேக நவீன அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்கி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பீடியாட்ரிக் ஓர்தோபீடிக் கிளப்ஃபுட் எனும் பிறவி பாத அமைப்பு குறைபாடு என்பது இரண்டு பாதங்கள் அல்லது இரண்டு கால்கள் வளைந்தோ கோணலாகவோ பிறக்கும் நிலையாகும். இத்தகைய குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தொடக்க நிலையில் சிகிச்சை அளித்தால் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும். இத்தகைய பாதிப்புக்கு உள்ளான பாதங்கள் அளவில் சிறியதாக இருக்கும்.
எக்ஸ்ரே பரிசோதனை மூலமாகவும், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமாகவும் பாதிப்பின் தன்மையை மருத்துவர்கள் துல்லியமாக கணிக்கிறார்கள். இதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவை சிகிச்சை மூலமாகவும், அதற்குப் பின்னரான முறையான இயன்முறை சிகிச்சை மூலமாகவும் நிவாரணம் தருவர்.
இதனைத் தொடக்க நிலையில் கண்டறிந்தால் பொன்செட்டி சிகிச்சை முறை மூலம் அறுவை சிகிச்சையற்ற சிகிச்சை முறையிலேயே சீராக்க இயலும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். வேறு சில குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பின் போது பிரத்யேக மாவுக்கட்டு மற்றும் காலணியை அணிவித்தும் நிவாரணம் வழங்குகிறார்கள்.
மருத்துவர் விக்னேஸ்வரன்
தொகுப்பு: அனுஷா


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM