மதுராந்தகம் - தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலை விட குறைவான வாக்கு சதவீதம் பதிவானதாகத் தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றித்துக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் மாதம் செவ்வாய்க்கிழமை(06) திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றித்துக் கழகம் - திமுக - அதிமுக - இடதுசாரிகள் - நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி உருவானது. இங்கு நேற்று காலை ஏழு மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. பதற்றமிக்க வாக்குச்சாவடி மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டனர்.
நேற்று மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு தேர்தல் ஆணையம் இங்கு 86.26 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவித்தது. அதேபோல் தாராபுரம் (தனி) தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் 80.31 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 93.22 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது என்பதும், அதனைத் தொடர்ந்து தாராபுரம் (தனி) தொகுதியில் கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் 89.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தோராயமாக ஆறு முதல் ஒன்பது சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இது வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கையின் வித்தியாசத்தில் பிரதிபலிக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.
இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்களை 'சீல்' வைத்து, காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரண்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை எட்டு மணி அளவில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM