செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய குறிப்பு..!?

07 Oct, 2026 | 04:02 PM
image

அண்மைக்காலமாக உங்களில் யாருக்கேனும் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து இருந்தாலோ அல்லது மற்றவர்கள் மீது உங்களுடைய பொறாமை பார்வை அதிகமாக ஏற்பட்டாலோ நீங்கள் செய்வினை மற்றும் எதிர்மறை ஆற்றல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அதே தருணத்தில் எம்மில் ஒவ்வொருவருக்கும் நாளாந்தம் குறைந்த அளவில் வீரியம் கொண்ட எதிர்மறை ஆற்றல் பாதிப்பிற்கு ஆளாகுவது இயல்பு. இதனை நீங்கள் நாளாந்தம் காலையில் நீராடுவதன் மூலமாகவும் அல்லது பிரத்யேகமாக நீராடுவதன் மூலமாகவும் அவை நீங்க பெற்று, நீங்கள் புத்துணர்ச்சியுடன் வாழ்வீர்கள்.

ஆனால் எதிர்மறை சிந்தனைகள் -எதிர்மறை எண்ணங்கள்- மற்றவர்கள் மீதான பொறாமை அதிகரித்தால் ...நீங்கள் உங்களுடைய எதிர்மறை ஆற்றலை அழித்து, உங்களை புதுப்பித்துக் கொள்ளவில்லை என பொருள் கொள்ளலாம். இத்தகைய தருணங்களில் உங்களிடம் சூட்சமமாக மறைந்திருக்கும் செய்வினை கோளாறுகளை அகற்ற பிரத்யேக குறிப்புகளை பாவிக்க வேண்டும் என எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு நீங்கள் ஒரு சதுர வடிவிலான மஞ்சள் வண்ண துணியை எடுத்து, அதில் ஒரு பிடி அரச மரத்தடி மண் - ஒரு பிடி வன்னி மரத்தடி மண்-  ஒரு பிடி வில்வ மரத்தடி மண் - ஒரு பிடி துளசி செடி மண் - ஒரு பிடி குல தெய்வ ஆலய வளாகத்தின் மண் - ஆகிய ஐந்து பிடி மண்களை அந்த மஞ்சள் வண்ண துணியில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் வீட்டின் மேற்கு திசையில் உள்ள சிவாலயத்திற்கு சென்று அந்த ஆலயத்திற்குள் மூன்று முறை வலம் வந்து அந்த மண்ணை உங்களது வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். அதில் சிறிது விபூதியை கலந்து உங்கள் வீட்டின் உள்புற வாசல் பகுதியில் கட்டி தொங்கவிட்டுவிடுங்கள்.

அன்றைய திகதியிலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு உங்களுடைய வீட்டில் மாயமாக கண்ணுக்குப் புலப்படாத வகையில் அமைந்திருக்கும் அனைத்து எதிர்மறை ஆற்றல்களும், செய்வினை கோளாறுகளும்... அகன்று வீடு முழுவதும் நேர் நிலையான ஆற்றல்கள் அதிகமாகி, உங்களுக்குள் நேர் நிலையான எண்ணங்களையும், செயல்களையும் வழங்கி , வெற்றி பெறச் செய்யும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோஷம் விலகி, யோகம் கிடைக்க எளிய...

2026-11-14 15:48:47
news-image

களத்திர தோஷம் நீங்க எளிய வழிமுறை...

2026-11-13 15:11:21
news-image

வியாபாரம் செழித்து வளர்வதற்கான பிரத்யேக வழிமுறை 

2026-11-12 15:05:59
news-image

போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான எளிய...

2026-11-11 16:43:16
news-image

பகிர்ந்து கொள்ள இயலாத சிக்கலில் இருந்து...

2026-11-10 15:50:28
news-image

தன வரவு அதிகரிக்கவும், சேமிப்பு உயரவும்...

2026-11-09 16:35:58
news-image

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் செப்டிக் ஒர்தரைடீஸ் எனும்...

2026-11-09 16:35:51
news-image

பொருளாதார பற்றாக்குறையை தீர்க்கும் சூட்சம வழிமுறை

2026-11-07 15:47:03
news-image

இருளிலிருந்து ஒளியை நோக்கி : தீபாவளியின்...

2026-11-07 10:35:13
news-image

சுப பலன்களும் கால பகை கிரகங்களும்...

2026-11-06 18:16:42
news-image

கணவன் - மனைவி இடையேயான பிரச்சினையை...

2026-11-05 17:55:25
news-image

தொழில் தடையை நீக்கும் பிரத்யேக அம்மன்...

2026-11-04 14:38:07