அமீர் நடித்து வரும் 'மாகாளி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

07 Oct, 2026 | 03:23 PM
image

இயக்குநர் -நடிகர் -சமூக சிந்தனையாளர்- தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை திறன் படைத்த அமீர் முதன்மையான வேடத்தில் நடித்து வரும் 'மாகாளி' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் எஸ். பி. அரவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாகாளி' திரைப்படத்தில் அமீர், சுவாசிகா, அனீஸ்மா, ஹரிஹரன், அஸ்வின் ராம் , லெனின் பாரதி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

சமூகத்திற்கு தேவையான விடயத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் நவ்வி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணாமூர்த்தி- திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்..

இத்திரைப்படத்தை பற்றிய அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் அண்மையில் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்'...

2026-11-14 17:17:12
news-image

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் 'செங்குலம்'...

2026-11-14 17:17:02
news-image

நஸ்லென் நடிக்கும் 'பேச்சுலர் பார்ட்டி டீயெக்ஸ்'...

2026-11-14 17:16:07
news-image

தனுஷ்- மம்முட்டி நடிக்கும் 'ஓம்' படத்தின்...

2026-11-14 17:15:00
news-image

நடிகர் எஸ். பி. சித்தார்த் நடிக்கும்...

2026-11-14 16:29:30
news-image

கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் டி...

2026-11-14 16:27:22
news-image

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'ஸ்டேஷன்'...

2026-11-14 16:27:09
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின்...

2026-11-14 16:27:00
news-image

புதுமணத் தம்பதிகளான அனிருத் – காவியா...

2026-11-14 16:08:41
news-image

டைட்டானிக் ( காதலும் கவுந்து போகும்)...

2026-11-14 15:49:20
news-image

பிளாக் - Flag - திரைப்பட...

2026-11-14 15:41:56
news-image

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை...

2026-11-13 15:28:17