பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றத்தால் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையான பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, கடந்த 12 ஆம் திகதி  இன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணை தனக்கு கிடைக்கவில்லை எனவும் ஊடகங்கள் வாயிலாக வெளியான செய்திகளுக்கு அமையவே தான் இன்று நீதிமன்றில் ஆஜரானதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு

நீதிமன்றில் ஆஜரானார் ரஞ்சன் ராமநாயக்க