கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கேஷ் திரைப்பட நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறுந்திரைப்படப் பெருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்றது.
கேஷ் திரைப்பட நிறுவனத்தின் ஸ்தாபக இயக்குநர் திருவாய்மொழி கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாஹரன் குமாரரட்டணம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
வைத்தியகலாநிதி எஸ். ஸ்ரீபவானந்தராஜா (பா.உ.) விசேட அதிதியாகவும், மாருதி ரெக்ஸ்ரைல்ஸ், கொழும்பு–11 நிறுவனத்தின் பணிப்பாளர் கந்தையா நடராஜா கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர்.
சட்ட விவகார ஆலோசகரும் அரசகரும மொழிபெயர்ப்பாளருமான ஆர். பிரணவா உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள், சிறப்பு அதிதிகள் மற்றும் கலைஞர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
குறுந்திரைப்படப் பெருவிழாவின் முக்கிய அம்சமாக ‘மானிடம்’, ‘அனுகம்பை’ மற்றும் ‘வைத்தியர் பைத்தியர்’ ஆகிய மூன்று குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடன நிகழ்வுகள், குறுநாடகங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. கலைஞர்களின் படைப்பாற்றலையும் திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
நிகழ்ச்சிகளை பயிலுநர் சட்டத்தரணி ஷிரோமி மோகன்ராஜ் தொகுத்து வழங்கினார்.
கலைத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்குறுந்திரைப்படப் பெருவிழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM