மேற்காசிய பதற்றம், புயல் தாக்கம் ; மசகு எண்ணெய் விலை 101 அமெரிக்க டொலரைக் கடந்தது

07 Oct, 2026 | 09:50 AM
image

மேற்காசிய நாடுகளின் மசகு எண்ணெய் விநியோக அதிகரிப்புக்கு மத்தியிலும், அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி வலயங்களை நோக்கி வரும் சக்திவாய்ந்த புயல் அச்சுறுத்தல் மற்றும் சவூதி அரேபியா மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் இன்று (07) புதன்கிழமை அதிகரித்துள்ளன.

ப்ரெண்ட் மசகு எண்ணெய் வர்த்தகம் பீப்பாய் ஒன்றுக்கு 93 சென்ட்கள் (0.92%) அதிகரித்து 101.51 அமெரிக்க டொலர்களாகவும், அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் 82 சென்ட்கள் (0.92%) அதிகரித்து  90.25 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

மெக்சிகோ வளைகுடாவில் உருவாகி வரும் புயல் அடுத்த இரு தினங்களில் இந்த ஆண்டின் முதல் அத்திலாந்திக்  சூறாவளியாக மாறும் என அமெரிக்க வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

அமெரிக்காவின் 15 சதவீதம் மசகு எண்ணெய் மற்றும் 5 சதவீதம் இயற்கை எரிவாயு உற்பத்தியைச் செய்யும் கடல்சார் வலயங்களையும், 6 சுத்திகரிப்பு நிலையங்களையும் இப்புயல் பாதிக்கக்கூடும்.

சவூதி அரேபியாவின் ஜாஸான் மற்றும் நஜ்ரான் விமான நிலையங்களைக் இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அமெரிக்க பெற்றோலிய நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 02 ஆம் திகதியுடன் முடிந்த வாரத்தில் அமெரிக்காவின் மசகு எண்ணெய் இருப்பு 2.09 மில்லியன் பீப்பாய்களால் குறைந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தலைவர்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்துகள் மற்றும் மேற்காசியாவில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மையால் எண்ணெய் விலைகள் பீப்பாய் 100 அமெரிக்க  டொலரை ஒட்டி உயர்மட்டத்திலேயே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பானில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி 

2026-11-08 11:51:47
news-image

இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? -...

2026-11-08 10:34:39
news-image

இடைத்தேர்தலுக்குப் பின் ஈரான் மீது அமெரிக்கா...

2026-11-07 15:01:16
news-image

மெலனியா ட்ரம்புக்கு உயரிய விருது வழங்கி...

2026-11-07 10:56:17
news-image

2027ஆம் ஆண்டுக்குள் 2 இலட்சம் தற்காலிகக்...

2026-11-07 10:27:51
news-image

குத்துவிளக்கேற்றிய டிரம்ப்! வெள்ளை மாளிகையில் களைகட்டிய...

2026-11-07 10:16:26
news-image

இஸ்ரேலின் புதிய பிரதமர் யார்? ; ...

2026-11-07 10:04:59
news-image

பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய...

2026-11-06 17:54:18
news-image

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் –...

2026-11-06 16:05:27
news-image

என்னை பதவி நீக்கம் செய்தால் ஜனநாயகக்...

2026-11-06 12:31:44
news-image

நியூசிலாந்து கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை...

2026-11-06 12:15:09
news-image

இந்தோனேசியாவில் பாதுகாப்பு மற்றும் உயர்மட்டத் தலைவர்களின்...

2026-11-05 11:55:35