பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க  உயர் நீதிமன்றில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்றைய தினம் அவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் நீதிமன்றம் கடந்த 12 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமைக்கு அமைய அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் சுனந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி சுனில் பெராரா ஆகியோர் உயர் நீதிமன்றில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த இரு மனுக்களும் கடந்த 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகி, அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.