செல்லுலிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

06 Oct, 2026 | 03:58 PM
image

எம்மில் சிலருக்கு கை, கால் ஆகிய பகுதிகளில் உள்ள தோல் சிவந்திருக்கும். அந்த இடத்தில் எம்முடைய விரலை வைத்தால்.. சிறிய அளவில் வலியோ, வீக்கமோ இருக்கும். இதனை மருத்துவ மொழியில் பாக்டீரியா கிருமிகளால் தோல் பகுதியில் ஏற்படும் செல்லுலிடிஸ் என குறிப்பிடுகிறார்கள். இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

செல்லுலிடிஸ் என்பது பாக்டீரியா கிருமிகளால் தோல் பகுதியில் ஏற்படும் தொற்று பாதிப்பாகும். இது பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் என்றாலும் இது தீவிரமானது. பெரும்பாலும் பாதங்களிலும், கால் பகுதியிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதை காணலாம்.

ஆனால் இவை உடலின் எந்த பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கலாம். எம்முடைய தோலில் சிவந்திருந்தாலோ அல்லது வீக்கம் அடைந்திருந்தாலோ அல்லது தொடும் போது இளஞ்சூடாக இருந்தாலோ விவரிக்க முடியாத அசௌகரியத்தை உணர்வார்கள். இதற்கு சிகிச்சை பெறாவிட்டால் குருதி ஓட்டத்தில் இத்தகைய தொற்று பாதிப்பு பரவி.. நிணநீர் முடிச்சுகளில் கடும் பாதிப்பை உண்டாக்கும்.

தோலில் ஏற்படும் சிறிய அளவிலான விரிசல் மூலம் பாக்டீரியா கிருமிகள் எம்முடைய உடலுக்குள் நுழைகிறது. மேலும் பாக்டீரியா கிருமிகள் மெல்லிய உலர்ந்த தோல் அல்லது வீங்கிய தோலின் பகுதி வழியாக உடலுக்குள் நுழையும்.

சிலருக்கு தோலில் நிறமாற்றத்துடன் காய்ச்சல், நடுக்கம், வலி.. போன்ற அறிகுறிகளும் ஏற்பட்டால்.. உடனடியாக சிகிச்சை பெற வேண்டியதிருக்கும்.

எம்முடைய உடலில் ஏற்படும் காயங்கள்- நோய் எதிர்ப்புத்திறன் குறைவு - உடற்பருமன் - தோல் நோய் பாதிப்பு-  ஆகிய பல்வேறு காரணங்களால் இத்தகைய செல்லுலிடிஸ் பாதிப்பு ஏற்படக்கூடும்.

இத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வைத்தியர்கள் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள்.

அதனை தொடர்ந்து  நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி இதற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.

அத்துடன் மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாதிருக்க.. வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்வியல் நடைமுறைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

வைத்தியர் தீப்தி - தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூக்கடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை-...

2026-11-14 15:45:24
news-image

இரத்த நாள அடைப்பை நீக்கும் நவீன...

2026-11-13 15:26:37
news-image

பிட்யூற்றரி மேக்ரோஅடினோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-11-12 15:10:08
news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47
news-image

வாஸ்குலர் ரிங் எனும் பிறவி இதயக்...

2026-11-02 13:47:27
news-image

கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும்...

2026-10-31 14:40:04