அரசாங்க பணியிலும், தனியார் துறையிலும் மாதுந்தோறும் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மாதாந்திர செலவுகளும், நாளாந்த செலவுகளும் திட்டமிடப்பட்டு வகையில் தான் செலவுகளை மேற்கொள்வார்கள்.
இதில் ஏதேனும் புதிதாக விவரிக்க இயலாத தருணங்களில் செலவுகள் ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கு திணறுவார்கள் அல்லது அதிக வட்டிக்கு கடனை பெற்று, அந்தத் தருணத்திலிருந்து பகிர்ந்து கொள்ள முடியாத சங்கடங்களை எதிர்கொள்ள தொடங்குவார்கள்.
இத்தகைய தருணத்தில் நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், கூடுதலான தனவரவு தங்கு தடையின்றி கிடைப்பதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக குறிப்பினை வழங்கி இருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்: சதுர வடிவிலான மஞ்சள் வண்ண பட்டுத் துணி - உலர்ந்த தாமரை விதைகள்.
மகாலட்சுமியின் பரிபூரண அருள் நிறைந்திருக்கும் வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் ஒன்பது தாமரை விதைகளை எடுத்துக்கொண்டு, சதுர வடிவிலான மஞ்சள் வண்ண பட்டு துணியில் வைத்து, அதனை முடிச்சிட்டு, உங்களுடைய பூஜை அறையில் வைத்திடுங்கள்.
அதற்கு முறையாக தீப தூபம் காட்டி அந்த முடிச்சினை உங்களுடைய பணப்பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் இந்த தாமரை விதை முடிச்சிற்கு தீப தூபம் காட்டிட வேண்டும்.
இந்த தாமரை முடிச்சு உங்களுடைய பணப்பெட்டியில் இடம் பிடித்திருக்கும் போது, குருவின் ஞானமும், மகாலட்சுமியும் அருளும், ஒன்றிணைவதால் நெருக்கடிகளை எப்படி திட்டமிட்டு எதிர்கொள்வது என்பதையும், அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டுவது குறித்த சிந்தனையும் ஷண நேரத்தில் தோன்றி, உங்களுடைய நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக எண்ணத்தை ஏற்படுத்தும். அத்துடன் அதற்குரிய கூடுதலான தன வரவு வருவதற்கான வாய்ப்பையும் உண்டாக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM