அணியிலிருந்த மூத்த வீரர்களின் அறிவுரைகளை பொருட்படுத்தாத கோஹ்லியின் நடவடிக்கையே தற்போது இந்திய அணியின் பலமாக மாறிவிட்டதென இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கார் தெரிவித்துள்ளார்.

“விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்டமே இந்திய அணியின் பலமாக மாறிவிட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விராட் கோலி அறிமுகமான போது அவர் கண்களில் ஒரு தீ தெரிந்தது. அது முதல் அவர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

“ஆனால் அப்போது அணியில் இருந்த மூத்த வீரர்கள் விராட்டிடம் ஆக்ரோஷத்தை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தினர். கோலி இதனை பொருட்படுத்தாவில்லை. அதுவே தற்போது இந்திய அணியின் பலமாக மாறிவிட்டது.

“விடாப்பிடியான குணம் கொண்டவர் விராட். அதுதான் அவரது வெற்றியின் ரகசியம். அவர் தனது ஆக்ரோஷத்தை அணியில் இருக்கும் மற்ற அனைத்து வீரர்களுக்கும் கடத்துகிறார். அதுதான் இந்திய அணியின் வெற்றி ரகசியம்” என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.