(நெவில் அன்தனி)
பாகிஸ்தானில் இந்த மாதம் மத்திய பகுதியில் ஆரம்பமாகவுள்ள மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் 19 மாத இடைவெளிக்குப் பின்னர் ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலேயே அவிஷ்க பெர்னாண்டோ கடைசியாக விளையாடி இருந்தார்.

அண்மைக்காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு சதங்கள் குவித்ததன் பலனாக அவருக்கு மீண்டும் சர்வதேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுக் குழுத் தலைவர் கபில விஜேகுணவர்தனவினால் சிரேஷ்ட மற்றும் அனுபவசாலி என விபரிக்கப்பட்டு இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கான சுற்றுப் பயணத்தில் உப அணித் தலைவராக நியமிக்கப்பட்ட சரித் அசலன்கவின் இடத்திற்கே அவிஷ்க பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன் அய்ச்சி - நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் ரி20 கிரிக்கெட்டில் இலங்கையை வெண்கலப் பதக்கத்துக்கு வழிநடத்திய சஹான் ஆராச்சிகேவும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுக்கு எதிரான ரி20 தொடரில் விளையாடவுள்ள கமில் மிஷார, அணித் தலைவர் குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, ஏஷான் மாலிங்க ஆகியோர் ஒருநாள் குழாத்திலும் இடம்பெறுகின்றனர்.
இலங்கை ஒருநாள் குழாம்
பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, கமில் மிஷார, குசல் மெண்டிஸ் (தலைவர்), பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, சச்சிந்து கொலம்பகே, துஷமன்த சமீர, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, ஏஷான் மாலிங்க.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM