ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டாருக்கு பயணமானார். அவருடன் 20 பேர் அடங்கிய குழுவினரும் இந்த விஜயத்தில் கலந்துகொள்கின்றனர்.

ஜனாதிபதி மற்றும் குழுவினர் சற்று முன், அதாவது இன்று (24) மாலை 6.50 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூ.எல்.217 விமானத்தில் ஏறி கட்டார் நோக்கிப் பயணமாயினர்.