விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டாடும் உலக விண்வெளி வாரம்

Published By: Digital Desk 1

05 Oct, 2026 | 01:40 PM
image

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 திகதி  முதல் 10  திகதி வரை உலகம் முழுவதும் உலக விண்வெளி வாரம் (World Space Week)   விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை அங்கீகரித்து, பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடப்படும் மிகப்பெரிய விண்வெளி சார்ந்த நிகழ்வாகும். 

சர்வதேச விண்வெளி நிறுவனங்கள், பாடசாலைகள், கோளரங்கங்கள் , அருங்காட்சியகங்கள் மற்றும் வானியல் மன்றங்கள்  இந்த வாரத்தில்  கல்வி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.

உலக விண்வெளி வாரமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டாடுவதுடன், விண்வெளி அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்த்தி, விண்வெளித் துறையால் மனிதகுலம் பெறும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

இந்த வாரத்தின் முக்கிய நோக்கமாக  இளைஞர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் ஆர்வத்தை ஏற்படுத்துவது  ஆகும். அத்துடன், சர்வதேச அளவில் விண்வெளி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் கல்விக்கான ஒத்துழைப்பையும் இது ஊக்குவிக்கிறது.

இந்த விண்வெளி வாரமானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்புகளையும், அவை மனித வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதையும் கொண்டாடும் ஒரு சர்வதேச நிகழ்வாகும்.

முதல் மனிதன் நிலவில் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் 1980 ஆம் ஆண்டில், ஜூலை 16  திகதி முதல் 24 திகதி  வரை , உலக விண்வெளி வார சங்கம் (WSWA) "ஸ்பேஸ்வீக்" (Spaceweek) நிகழ்வை ஒருங்கிணைக்கத் தொடங்கியது.

அமெரிக்கா முழுவதும்  இக்கொண்டாட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக 1981 ஆம் ஆண்டில், "ஸ்பேஸ்வீக்” தேசிய தலைமையகம்" (Spaceweek National Headquarters)  உருவாக்கப்பட்டது.

விண்வெளி வாரத்தை 1999 ஆம் ஆண்டளவில், 15 நாடுகள்  அங்கீகரித்த நிலையில் 1999 இல், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4  திகதி  முதல் 10  திகதி  வரை "உலக விண்வெளி வாரம்" கொண்டாடப்படும் என அறிவித்தது.

அக்டோபர் 4 ஆம் திகதியைக் கொண்ட வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், உலகின் முதல் செயற்கைக்கோளான ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்' (Sputnik) அந்த வாரத்தில்தான் விண்வெளிக்கு ஏவப்பட்டதே  ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்