எம்மில் சிலர் இந்த பிறவியில் பொருளாதார ரீதியாக தன்னிறைவுடன் வாழ்ந்து வருவார்கள். ஆனால் அவர்கள் தொழில் தொடங்கினாலோ அல்லது குடும்பத்திலோ சுப நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் தடைகளையும், தாமதங்களையும் எதிர்பாராத விடயங்களையும் மட்டுமே எதிர்கொண்டிருப்பர்.
மேலும் நினைத்துப் பார்க்கும் காரியங்களில் எல்லாம் தோல்விகள் தொடர்கதையாக இருக்கும். இவர்கள் பரிகாரங்கள் செய்தாலும் அதனூடாக கிடைக்க வேண்டிய முழுமையான பலன் கிடைப்பதில்லை. இவர்களுக்கு பூர்வ புண்ணியத்திற்கான நற்பலன்கள் கிடைப்பதில் சூட்சம தடைகள் இருக்கக்கூடும்.
அதே தருணத்தில் இவர்களுடைய பரம்பரையில் விவரிக்க இயலாத சூட்சம தடைகளையும் தொடர் பிறவிகளில் அனுபவித்து வருவார்கள். இத்தகைய பாதிப்பை துல்லியமாக அவதானித்து அதற்கான எளிய குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றினால் மாய தடைகள் விலகி, சுப பலன்களைப் பெறலாம் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஒன்பதாம் இடத்தில் சனி+ ராகு சேர்க்கை பெற்றிருந்தாலோ அல்லது சனி -ராகு ஆகிய கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும்.. இதை கோச்சார ரீதியாக பார்வை பெற்றிருந்தாலும்... உங்களுக்கு நிகழ வேண்டிய சுப நிகழ்வுகள் அதாவது பூர்வ புண்ணியத்தின் பலன்கள் கிடைக்காமல் இருக்கும். அத்துடன் அது தொடர்பான கெடு பலன்கள் தான் தொடரும்.
இவர்கள் உங்களுடைய லக்னத்தில் ஒன்பதாம் இடத்தின் அதிபதி எங்கு இருக்கிறாரோ..? அந்த கிழமையை தெரிவு செய்து கொண்டு, சனி ஹோரை அல்லது ராகு காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை உங்களுடைய முன்னோர்களை மனதில் தியானித்து வீட்டின் தென் திசையில் ஒரு தீபத்தை ஏற்றி பிரார்த்திக்க வேண்டும். முன்னோர்களின் ஆசியை கோர வேண்டும்.
இத்தகைய நாளில் அல்லது வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து ஒருவருக்கு ஒரு வேளை உணவு மற்றும் தண்ணீர் போத்தலுடன் அன்னதானம் செய்திட வேண்டும்.
இதற்கான வாய்ப்பு -சந்தர்ப்பம் குறைவு என்பவர்கள் வியாழக்கிழமைகளில் உங்களுடைய குலதெய்வ ஆலயத்திற்கு அல்லது பௌர்ணமி நாளில் உங்களுடைய குலதெய்வ ஆலயத்திற்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர் போத்தலை தானமாக வழங்கிட வேண்டும்.
வருடம் ஒரு முறை மூலம் அல்லது பூராடம் நட்சத்திர நாளன்று அருகில் உள்ள புனித நதிக்கு சென்று நீராடி முதியோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தாலும் உங்களுடைய பூர்வ புண்ணிய தோஷம் விலகி, நற்பலன்களை வழங்கத் தொடங்கும்.
மேற்கூறிய எளிய குறிப்புகளை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பாவித்தால், உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றமும், மகிழ்ச்சியும் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM