பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி கண் பாதிப்பு நீங்குவதற்கான சிகிச்சை

Published By: Digital Desk 2

05 Oct, 2026 | 12:16 PM
image

பிறந்த பச்சிளம் குழந்தைகள் அழுதிடும் போது அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் எனும் திரவம் இயல்பாக வெளியேற வேண்டும். ஆனால் சில பிள்ளைகளுக்கு இவை இயல்பாக வெளியேறாமல் கண்களிலேயே தேக்கமடைந்துவிடும்.

இத்தகைய பாதிப்பை வைத்தியர்கள் கண்ணீர் குழாய் அடைப்பு என பெயரிட்டு, அதற்கு உரிய சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணம் வழங்குகிறார்கள். இதனை மருத்துவமொழியில் 'கான்ஜிநட்டல் நாசோகிரைமல் டக்ட் அப்ஸ்ட்ரக்ஷன்' என குறிப்பிடுவர்.

சில பிள்ளைகள் பிறந்து சில மாதங்களுக்கு பின்னரும் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது அல்லது கண்கள் கலங்கி இருப்பது அல்லது கண் இமைகளின் ஓரப்பகுதியில் பசை போல் மஞ்சள் வண்ணத்திலான கசிவு தேங்கி இருப்பது, கண்ணின் ஓரத்தில் சிறிய அளவிலான வீக்கம் இருப்பது ஆகியவை இத்தகைய பாதிப்பின் அறிகுறிகளாக அவதானிக்கலாம்.

பொதுவாக தாயின் கருப்பையில் சிசு வளரும் தருணத்தில் கண்ணீர் குழாயின் இறுதி பகுதியில் உள்ள ஒரு மெல்லிய சவ்வு இயல்பாக இயங்காமல் இருப்பதே இத்தகைய பாதிப்பின் முதன்மையான காரணமாகும். இதனால் சில பிள்ளைகளுக்கு கண்ணீர் கண்களிலேயே தேங்கி வெளியேறும்.

பொதுவாக இத்தகைய பாதிப்பிற்கு 90 சதவீதம் தாய்மார்கள் தங்களுடைய பிள்ளைகளின் கண் பகுதியில் வைத்தியர்களின் அறிவுரைப்படி மென்மையான முறையில் மசாஜ் செய்வதன் மூலம் இத்தகைய அடைப்பு இயல்பாக நீங்கிவிடும். சிலருக்கு மட்டுமே இத்தகைய பாதிப்பில் தொற்று உண்டாகும். அவர்களுக்கு வைத்தியர்கள் பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவார்கள்.

இதில் மிக அரிதாக ஒரு வயதை கடந்த பிறகும் சில பிள்ளைகளுக்கு இத்தகைய கண்ணீர் வடிக்குழாய் அடைப்பு பாதிப்பு நீங்கவில்லை என்றால், வைத்தியர்கள் சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இதனை சீர்படுத்தி, முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.

வைத்தியர் அமர் அகர்வால்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூக்கடைப்பு பாதிப்பிற்கான நவீன சத்திர சிகிச்சை-...

2026-11-14 15:45:24
news-image

இரத்த நாள அடைப்பை நீக்கும் நவீன...

2026-11-13 15:26:37
news-image

பிட்யூற்றரி மேக்ரோஅடினோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-11-12 15:10:08
news-image

பெல்விக் அசிடபுலர் ஃப்ராக்சர் எனும் இடுப்பு...

2026-11-11 16:42:12
news-image

ஸ்போண்டிலோஸிஸ்டெசிஸ் எனும் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும்...

2026-11-10 15:59:08
news-image

நீரிழிவு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-11-07 16:35:21
news-image

ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி எனும் இதய தசை...

2026-11-06 18:17:18
news-image

பித்தப்பை சுவர் சிதைவு நோய் பாதிப்பிற்கான...

2026-11-05 16:52:08
news-image

அகோராஃபோபியா எனும் உளவியல் பாதிப்பிற்கான சிகிச்சை

2026-11-04 14:01:10
news-image

கர்ப்பப்பை குறைபாடுகளை கண்டறியும் நவீன பரிசோதனை...

2026-11-03 14:47:47
news-image

வாஸ்குலர் ரிங் எனும் பிறவி இதயக்...

2026-11-02 13:47:27
news-image

கான்ட்ராஸ்ட் இன்டீயூஸ்டு கிட்னி இன்ஜுரி எனும்...

2026-10-31 14:40:04