கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ் விழா

Published By: Digital Desk 2

05 Oct, 2026 | 10:10 AM
image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்யும் “முத்தமிழ் விழா” எதிர்வரும் 07 ஆம் திகதி பிற்பகல் 02 மணியளவில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் அதிபர் வாசுகி சுதாகர் தலைமை தாங்கவுள்ளார்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் துரை மனோகரனும், சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆணையாளர் நாயகம் சு. முரளிதரனும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், கெளரவ விருந்தினர்களாக  அபிராமி கைலாசபிள்ளை,புரவலர் ஹாசிம் உமர், கலாநிதி த.முத்துக் குமாரசாமி, கலாநிதி  உ.நவரட்ணம், கலாநிதி க.இரகுபரன், கலாநிதி ம.சுதர்ஷினி, சிவதமிழ் செல்வர் செ.நவநீதகுமார், செந்தமிழ் சொல்லருவி  சந்திரமெளலீசன் லலீசன் கலாபூஷணம் வெ.முத்தழகு, சிரேஷ்ட கலைஞர் ராதாமேத்தா  மற்றும்  அதிபர் சோ. முரளி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

முத்தமிழ் விழாவின் சிறப்பு நிகழ்வாக, வாழ்நாள் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரனுக்கு ‘இந்துவின் வித்தகக்குரிசில்’ என்ற விருது முதன்முறையாக வழங்கப்படவுள்ளது.

மேலும், பல்வேறு கலை மற்றும் இலக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழ் இலக்கிய மன்ற நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக ஐயப்ப சுவாமிமார்களின் விசா மற்றும்...

2026-11-14 09:49:11
news-image

ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில்...

2026-11-14 04:38:35
news-image

அனைத்து ஆத்துமாக்கள் தின திருப்பலி

2026-11-13 09:56:02
news-image

19ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் 2027...

2026-11-12 16:54:04
news-image

அட்டனில் இன்று அமரர் இர. சிவலிங்கத்தின்...

2026-11-12 14:02:51
news-image

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய...

2026-11-08 16:38:22
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-11-08 16:32:19
news-image

ITEC முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

2026-11-07 13:55:40
news-image

நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் உலக ஆன்மிகத் தலைவர்...

2026-11-06 13:52:12
news-image

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில்...

2026-11-06 13:16:16
news-image

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் பாடசாலையின்...

2026-11-04 09:31:25
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-11-03 14:04:32