சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாக அமைந்துள்ள சனி, சூரியனிலிருந்து சுமார் 142 கோடி கிலோமீற்றர் தொலைவில் சூரியனைச் சுற்றி வருகிறது.
சூரியக் குடும்பத்தின் ஏனைய கிரகங்களில் இருந்து வேறுபட்ட வகையில், சனியைச் சுற்றி தட்டையான வளையங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில், சூரியன், பூமி மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அமையும் ‘எதிர்நிலை நிகழ்வு’ இன்று (04) ஞாயிற்றுக்கிழமை வானில் தென்படவுள்ளது.
‘எதிர்நிலை நிகழ்வு’ என்பது சூரியனுக்கு எதிர்த் திசையில் பூமிக்கும் சனிக்கும் இடையில் சூரியன், பூமி, சனி ஆகியவை நேர்க்கோட்டில் அமையும் வானியல் நிகழ்வாகும்.
இந்த நிகழ்வின்போது சனியின் முன்பகுதியில் சூரிய ஒளி முழுமையாகப் படுவதால், அது வழக்கத்தைவிட அதிகப் பிரகாசமாகவும் பெரிதாகவும் தென்படும்.
இதன்போது சனி கிரகம் பூமிக்கு சுமார் 126 கோடி கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 3 அல்லது 4 ஆம் திகதியளவில், மாலை சூரியன் மறையும் நேரத்தில் சனி வானில் உதயமாகும்.
பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஒரு வருடம் எடுத்துக்கொள்ளும் நிலையில், சனி சூரியனை ஒருமுறை சுற்றிவர சுமார் 29.5 ஆண்டுகள் ஆகின்றன.
பூமியின் சுற்றுப்பாதை சனியை விட சிறியதாக இருப்பதால், அது சனியை விட வேகமாக சூரியனைச் சுற்றி வருகிறது. இதனால் ஆண்டுக்கு ஒருமுறை பூமி, சூரியனுக்கும் சனிக்கும் இடையில் கடந்து செல்கிறது.
சனியின் முந்தைய எதிர்நிலை நிகழ்வு கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்றது. அடுத்த எதிர்நிலை நிகழ்வு 2027 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி வானில் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM