துபாய் இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி பிளைதுபாய் விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த இணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி, கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி தாக்க முயன்றார்.
தாக்குதலில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் இருந்த போதிலும், ஸ்மித் மச்சார் சாதுரியமாக செயல்பட்டு காக்பிட் கதவைத் திறந்துள்ளார்.
இதனை அடுத்து உள்ளே சென்ற பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் தாக்குதல் நடத்திய இணை விமானியைக் கட்டுப்படுத்தியுள்ளனர். பின்னர் விமானம் சவூதி அரேபியாவின் தபுக் நகரில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதுடன், அதில் பயணித்த 174 பேரின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
இந்நிலையில், மேலதிக சிகிச்சைக்காக ஸ்மித் மச்சார் எயார் துபாய்க்கு அழைத்துவரப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை ஷேக் ஹம்தான் நேரில் சந்தித்துள்ளார். ஸ்மித் மச்சாரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததுடன், அவரது துணிச்சலையும் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய செயலையும் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பிலான புகைப்படங்கள் இணையத்ததததில் கவனம் பெற்றுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM