சமனலவெவ பகுதியில் நீரில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு!

04 Oct, 2026 | 02:26 PM
image

மொனராகலை பகுதியிலிருந்து சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைப் பார்வையிடுவதற்காகக் கல்விச் சுற்றுலா சென்ற  மாணவர்கள் குழுவொன்றைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவன், சமனலவெவ பகுதியில் நீரில் மூழ்கிப் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவர்கள் குழு கூரகல புண்ணிய பூமியை வழிபடச் செல்லும் வழியில், சமனலவெவ நீர்த்தேக்கத்தைப் பார்வையிடுவதற்காக வாகனங்களை நிறுத்தியுள்ளனர்.

இதன்போது,  மூன்று மாணவர்கள் நீராடும் நோக்கில்  நீர் வெளியேறும் நீர்த்தேக்கத்திற்கு அருகில் கீழே இறங்கிய வேளையில், ஒரு மாணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம் காணாமல் போன மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சமனலவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40