(எஸ். கணேசன்)

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தமாதப்படுவதற்கு எதிராகவும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு எதிராகவும் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய கண்ட ஆப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கமானது உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பிற்போட்டு வருகின்றது. 

இவ்வாறு திட்டமிட்டு தேர்தல்களை காலதமாதப்படுத்துவதானது ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடாகும். ஆகவே இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டினை கண்டித்து நாம் பாரிய கண்டன ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

இது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.