நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100,871 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மொத்தப் பாதிப்பில் 52.45% சதவீதமானோர் (52,906 நோயாளர்கள்) மேற்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 21,377 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாகக் கொழும்பில் 19,759 பேரும், கண்டியில் 7,689 பேரும், களுத்துறையில் 6,400 பேரும், மாத்தறையில் 6,305 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாதாந்த அடிப்படையில் ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 29,964 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஆகஸ்டில் 10,155 பேரும், செப்டம்பரில் 5,230 பேரும் பதிவாகியிருந்த நிலையில், ஒக்டோபர் மாதத்தின் இதுவரையான நாட்களில் 151 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நுளம்புகள் பெருகுமிடங்களை அழித்து சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதார துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM