நடிகை ஜான்வி கபூரை குறிவைத்த ஏஐ டீப்ஃபேக்

Published By: Digital Desk 2

04 Oct, 2026 | 01:48 PM
image

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த ‘தேவரா: பார்ட் 1’ திரைப்படத்தின் ‘சுட்டமல்லே’ பாடல் காட்சிகளைப் பயன்படுத்தி, நடிகை ஜான்வி கபூரை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் காணொளிக்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜூனியர் என்டிஆர், “அருவருப்பானது. நோய்வாய்ப்பட்ட மனநிலை. வெட்கமற்ற செயல்” என தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்களை தாயாகவும் தெய்வமாகவும் போற்றும் இந்திய சமூகத்தின் கலாசார மதிப்புகளுக்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படும் விதத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ‘மாத்ருதேவோ பவ’ என்பது வெறும் வார்த்தை அல்ல; அது இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதி எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளமை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த டீப்ஃபேக் காணொளியின் பின்னணியில் இருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவும் கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“மனிதத்தன்மையின் மிக மோசமான கீழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சும்மா விடக்கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை மேற்கொள்ள எவரும் அஞ்சும் வகையில் முன்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்குமா என உலகம் விவாதித்து வரும் நிலையில், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிலர் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதாகவும் விஜய் தேவரகொண்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது டிஜிட்டல் வடிவிலான பாலியல் அத்துமீறலுக்கு ஒப்பானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சட்ட அமுலாக்க அதிகாரிகள் இத்தகைய செயல்களை மிகவும் தீவிரமான குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த அநீதிக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுக்கும் அனைவருக்கும் தனது முழுமையான ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என்றும் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39
news-image

கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 3 '...

2026-10-08 16:20:43
news-image

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும்...

2026-10-08 16:03:29
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'அன்பில்...

2026-10-08 16:03:09
news-image

'டெலிவரி பாய் 'படத்தின் வெளியீட்டு திகதி...

2026-10-08 15:28:23
news-image

தேவதர்ஷினி, அஞ்சலி நாயர், சித்தி இத்னானி...

2026-10-08 15:28:08
news-image

மக்களின் மனதை மாற்றும் வல்லமை கொண்டது...

2026-10-08 15:16:28