நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் மின்னல் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று (04) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (05) திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக, திறந்தவெளிகளில் அல்லது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்த்து, உடனடியாகப் பலமான கட்டிடங்களுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட திறந்த நீர்நிலைகளுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயர் இணைப்பு கொண்ட தொலைபேசிகள் மற்றும் பிரதான மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அவசர உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM