நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

04 Oct, 2026 | 01:03 PM
image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹபரனை, அம்பாறை மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ்விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

ஹபரனை - திருகோணமலை வீதி

ஹபரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரனை - திருகோணமலை வீதியின் கிதுல்உத்துவ பகுதியில், ஹபரணையிலிருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், அதன் பின்னாசனத்தில் பயணித்த நபரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னாசனத்தில் பயணித்த நபர் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவராவார். 

அம்பாறை 

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மபால மாவத்தையில், கல்முனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, அதே திசையில் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, அதில் பயணித்த இரு பெண்கள் மற்றும் சிறுமி ஒருவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பெண்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் உடவலவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

களுத்துறை 

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகம பகுதியில், ஹொரனையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதிப் பாரிய விபத்து ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னாசனத்தில் பயணித்த பெண்ணும் கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் கல்பாத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் மற்றும் 16 வயதுடைய சிறுமி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40
news-image

எரிபொருள் விநியோக நெருக்கடி: நாடளாவிய ரீதியில்...

2026-10-11 15:24:39