மீகொடை பகுதியில் 4,700 க்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

04 Oct, 2026 | 11:51 AM
image

மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெனகல பகுதியில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 4,720 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று சனிக்கிழமை (03) நண்பகல் வேளையில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25, 29 மற்றும் 32 வயதுடைய தடிகமுவ மற்றும் கொதட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59