(க.சிவலிங்கமூர்த்தி)
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையின் சிவராசா அனோஜனை கருணை மற்றும் மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி இந்து அமைப்புகளின் கூட்டமைப்பினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் ஹரி கதிர்காமர், செயலாளர் என். கே. எஸ். திருச்செல்வம் , ஒருங்கிணைப்பாளர் ராஜு பாஸ்கரன் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தி தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் கொழும்பு வாழ் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். அனோஜனின் விடுதலைக்காக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். பொதுமக்களும் தன்னார்வமாக வந்து கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், அனோஜனின் விடுதலைக்காக சேகரிக்கப்படும் கையெழுத்துக்களை மகஜராகத் தொகுத்து இலங்கை, இந்திய மற்றும் சவுதி அரசாங்கங்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் இந்து நிறுவனங்களிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் கையெழுத்துக்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளிடமும் கையெழுத்து பிரதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் செயலாளர் என். கே. எஸ். திருச்செல்வம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் சிவராசா அனோஜனின் விடுதலைக்காக இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளோம். சவுதி அரசாங்கம் கருணை மன்னிப்பு அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
கொழும்பில் உள்ள பல இந்து அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்கள், இந்து ஆலயங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம், சிங்கள, பௌத்த மற்றும் கிறிஸ்தவ மக்களும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் அனோஜனை விடுதலை செய்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், தமிழ், இஸ்லாமிய மற்றும் சிங்கள அமைப்புகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் எமது உண்ணாவிரதம் பக்கபலமாக அமைய வேண்டும் என்பதற்காகவே இதனை நடத்துகின்றோம்.
இலங்கை முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இந்து அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடம் கையெழுத்துக்களை சேகரிக்கவுள்ளோம். அனோஜனின் விடுதலையை விரும்பும் தனிநபர்களும் இதில் கையெழுத்திடலாம். சேகரிக்கப்படும் கையெழுத்துக்களின் பிரதிகளை இலங்கை, சவுதி அரேபிய மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு மகஜராக கையளிக்கவுள்ளோம். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளுக்கும் வழங்கவுள்ளோம்.
இனம், மொழி, மதம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் சிவராசா அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM