திருகோணமலையில் தமிழ் சிங்கள அகராதி நூல் வெளியீட்டு விழா!

Published By: Digital Desk 1

04 Oct, 2026 | 10:10 AM
image

மொழிகள் ஊடாக சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் தொகுக்கப்பட்ட 'தமிழ் - சிங்கள அகராதி' (Tamil - Sinhala Dictionary) நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை  (03 ) திருகோணமலை உப்புவெளி பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.  

தம்பிராஜா இராஜசிங்கம் (Thampiraja Rajasingam)  எழுத்துருவாக்கத்தில் வெளிவந்த இந் நூலானது, "மொழிகள் ஊடாக சமூகங்களை இணைப்போம்" என்ற கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் முதன்மை அதிதிகளாக  கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்முகம் குகதாசன் ஆகியோர் பங்கேற்று நூலினை பெற்றுக்கொண்டனர் 

கௌரவ விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார, திருகோணமலை பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபர்  டி. எம். யூ. எம். திசாநாயக்க, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் பேராசிரியர்  ஏ. எஃப். மொஹமத் அஷ்ரஃப், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் கே. டி. சுந்தரேசன் மற்றும் ரூகுணு பல்கலைக்கழகத்தின் சிங்களத்துறை மூத்த விரிவுரையாளர்  தம்மிக ஜெயசிங்க உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கல்விமான்களும் கலந்து சிறப்பித்தனர்.  

இரு சமூகங்களுக்கு இடையிலான கலாச்சார மற்றும் மொழிப் பாலம் அமைக்கும் மைல்கல்லாகக் கருதப்படும் இந்த அகராதி வெளியீட்டு விழாவில் பெருமளவான பொதுமக்களும், இலக்கிய ஆர்வலர்களும், கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருக்கோணேஸ்வரப் பெருமான் மஹா கும்பாபிஷேகம் :...

2026-10-16 16:52:43
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-16 13:27:06
news-image

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நவராத்திரி...

2026-10-15 16:13:27
news-image

கொழும்பு துறைமுக நகரில் ‘சென்டர் இசை...

2026-10-15 16:10:50
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் ஏற்பாட்டில்...

2026-10-15 16:07:03
news-image

ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி...

2026-10-15 15:26:19
news-image

கொழும்பில் சரிட்டா ஜுவலரியின் புதிய கிளை...

2026-10-15 15:32:07
news-image

கராத்தே நூல் “The Scientific Art...

2026-10-14 15:58:04
news-image

தேசியப் பாடல் போட்டி “ஸ்வர மஞ்சரி”...

2026-10-14 15:57:41
news-image

அபிநயக்ஷேத்ராவின் 20ஆவது அரங்கேற்ற மாணவியாக பிரித்திகா...

2026-10-14 09:35:03
news-image

திவ்யா சுஜேனின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ நூல்...

2026-10-13 17:02:35
news-image

பலரைக் கவர்ந்த ஜப்பானிய பாரம்பரிய மேள...

2026-10-14 11:18:39