கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் பயணத்தை தொடரும் மைத்ரேயி தமிழர்களுக்கு ஊக்கமளிக்கிறார் - கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் பாராட்டு

Published By: Digital Desk 1

04 Oct, 2026 | 10:09 AM
image

(நமது நிருபர்)

பொதுவெளியில் ஏற்படும் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் துணிச்சலுடன் தனது பயணத்தைத் தொடரும் நடிகை மைத்ரேயி இராமகிருஷ்ணன், பல தலைமுறைகளைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட கனேடிய ஆளும் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட ஹொலிவுட் நடிகை மைத்ரேயி இராமகிருஷ்ணன் அவரது அடையாளம் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பல்வேறு வாத, பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில், மைத்ரேயி இராமகிருஷ்ணனின் அடைவு குறித்து கனேடிய ஆளும் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜுவனிதா நாதன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஈழத்தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் மற்றும் கலைஞர்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி உலக அரங்கில் முன்னேற்றம் அடைவதைக் காண்பது பெருமைக்குரிய விடயமாகும் என அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

பொதுவெளியில் ஏற்படும் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலும் தன்னம்பிக்கை, நேர்மை மற்றும் துணிச்சலுடன் நடிகை மைத்ரேயி இராமகிருஷ்ணன் அவரது பயணத்தைத் தொடர்வதாகவும் ஜுவனிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

'தமிழர்களின் வரலாறு, அனுபவங்கள் மற்றும் அடையாளம் தொடர்பான விடயங்கள் மிகவும் ஆழமானதும் தனிப்பட்டதும் ஆகும். பொதுவெளியில் இடம்பெறும் விவாதங்களில் ஒரு கலைஞரின் மனித உணர்வுகளும் அனுபவங்களும் சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போகலாம்' என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

மேலும் மைத்ரேயி இராமகிருஷ்ணனின் மனவுறுதி, வலுவான குரல் மற்றும் பொதுவெளியில் தொடரும் இருப்பு என்பன பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் ஜுவனிதா அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59