நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் கலகொடஅத்தே ஞானசார தேரர்

04 Oct, 2026 | 09:09 AM
image

நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த நிலையில், தினியாவல பகுதியில் வைத்து நேற்றிரவு அளுத்கம குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் திறந்த பிடியாணை  பிறப்பித்திருந்தது.

அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டுப் பயணத்தடையும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தலைமறைவாக இருந்த கலகொடஅத்தே ஞானசார தேரர், நேற்று சனிக்கிழமை (03) தினியாவ பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் நேற்றிரவே கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு  அழைத்து வரப்பட்டார்.

அவர் இன்றையதினம்  உரிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59