இன்றைய வானிலை 

Published By: Digital Desk 2

04 Oct, 2026 | 08:17 AM
image

வடக்கு ,  கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை  மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில்  அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, மேல், வடமத்திய, வடமேல் , தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோ மீற்றர் வேகத்தில்   தென்மேற்குத் திசையில் இருந்து  காற்று வீசும். 

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே  ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால்  இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பேரினவாதத்தை தோற்கடிப்பதற்காக ஒன்று படுகின்ற ஒரு...

2026-10-17 05:54:25
news-image

பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்கு: சாட்சி...

2026-10-17 05:35:53
news-image

'கண்ட்ரி டுகெதர்' நடவடிக்கையின் கீழ் கைது...

2026-10-17 05:31:06
news-image

வளத்தாப்பிட்டி சந்தையை மீள ஆரம்பிக்கும் பிரேரணை...

2026-10-17 03:49:41
news-image

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி...

2026-10-17 03:42:29
news-image

வடக்கு கிழக்கில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில்...

2026-10-17 03:28:40
news-image

சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பஸ்...

2026-10-17 03:21:29
news-image

 கனமழையால் தம்பலாகாமம் பிரதேசத்தின் தாழ்நிலங்கள் நீரில்...

2026-10-17 03:05:02
news-image

14 வயது சிறுமி மீதான பாலியல்...

2026-10-17 03:18:34
news-image

கொழும்பு துறைமுக நகரில் 1.12 மில்லியன்...

2026-10-16 11:55:28
news-image

நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக ஞானசார தேரருக்கு...

2026-10-16 15:22:44
news-image

ஞானசார தேரரை விடுவிக்கும் அதிகாரம் சிறைச்சாலை...

2026-10-16 15:46:56