கொஸ்கொட பகுதியில் பொலிஸாருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களுக்கும் இடையே சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொஸ்கொட பகுதியில் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காகச் சென்றுகொண்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டபோதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
லொக்கு பெட்டி என அழைக்கப்படும் லந்துவஹெண்டி சுஜீவ ருவன் குமார டி சில்வா தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர்கள், கரந்தெனிய சுத்தா என அழைக்கப்படும் சோபனஹண்டி ஜெயலத் டி சில்வா தரப்பைச் சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தச் சென்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொகான் ஓலுகல தலைமையிலான வலான ஊழல் ஒழிப்புப் பிரிவு, குறித்த குழுவினரைக் கைது செய்வதற்காக கொஸ்கொட பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்போது, குற்றக் குழு உறுப்பினர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர் குறித்த குற்றக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM