நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தை தயாரிக்கும் லோகேஷ் கணகராஜ்

03 Oct, 2026 | 04:12 PM
image

இயக்குநராகவும்  நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து வெற்றிகளை அளித்து தமிழ் திரை உலகில் முத்திரை பதித்து வரும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நாசர் -ரெஜினா கஸாண்ட்ரா -ரமேஷ் திலக் - ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.

திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ்- நவீன் யெர்னேனி- வை. ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் பாரம்பரிய முறைப்படி சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படத்தைப் பற்றிய பிரத்யேக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

லோகேஷ் கனகராஜீன் தயாரிப்பு என்பதால் அவருடைய ரசிகர்கள் இந்த காணொளியை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருணாஸ் - வெற்றி இணைந்து மிரட்டும்...

2026-10-13 17:30:54
news-image

நடிகர் ஆர்யா நடிக்கும் 'ஹலோ காதல்'...

2026-10-13 17:28:22
news-image

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட நடிகர்...

2026-10-13 17:26:35
news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய ஜெய் நடிக்கும் புதிய...

2026-10-13 15:47:21
news-image

நடிகர் சுகாஸ் நடிக்கும் 'ஹைட் &...

2026-10-13 15:36:04
news-image

டிசம்பரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய்...

2026-10-13 15:35:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்தித்தனர் விஜய்...

2026-10-13 11:51:17
news-image

நெப்போலியன் நடிக்கும் 'அமெரிக்க ஆவி' படத்தின்...

2026-10-12 15:40:04
news-image

நடிகர் அருண் கார்த்தி நடிக்கும் 'பனி...

2026-10-12 15:26:41
news-image

தமிழக அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட நடிகர்...

2026-10-12 15:13:42
news-image

மனிதர்களின் நிறம் சார்ந்த அரசியலை பேசும்...

2026-10-12 15:03:04
news-image

நவம்பரில் வெளியாகும் சோசியல் திரில்லரான 'ஜெடூசி'

2026-10-12 14:56:50