இன்றைய திகதியில் எம்மில் சிலருக்கு திருமண வயதை கடந்த பிறகும் திருமணம் தொடர்பான முயற்சிகளில் தொடர் தாமதத்தையும், தடைகளையும் எதிர்கொண்டு வருவர். இவர்கள் உயர்கல்வி- சொந்த வீடு -பொருளாதார நிலையில் தன்னிறைவு- அழகான மற்றும் ஆரோக்கியமான தோற்றம் என்றிருந்தாலும் திருமணம் என்பது எட்டா கனியாகவே தொடரும். இந்நிலையில் திருமணத்திற்காக இவர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் முன், அதில் வெற்றி பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பிரத்யேகமாக சில வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு தேவையான பொருட்கள் : பால், மஞ்சள் தூள் மற்றும் பூஜைக்குரிய பொருட்கள்.
திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண் அல்லது பெண் தங்களுடைய வீட்டிற்கு அருகே உள்ள பாம்பு புற்றினை தேடி கண்டறிந்து அதனை தெரிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் பிறந்த கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த பாம்பு புற்றிற்கு ஒரு கோப்பை நிறைய பால் அதில் சிறிது மஞ்சத்தூளை கலந்து அந்த புற்றிற்கு அபிஷேகமோ அல்லது புற்றுக்கு அருகிலோ வைத்து விட வேண்டும்.
எடுத்துச் சென்றிருக்கும் பூஜை பொருட்களை அங்கு வைத்து திருமணம் தொடர்பான தோஷங்கள் அனைத்தும் நீங்கி இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க சர்ப்பங்களின் ஆசி வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து நான்கு அல்லது ஏழு முறை இடமிருந்து வலமாக பாம்பு புற்றினை சுற்றி வந்து வணங்கிட வேண்டும். இதனை நீங்கள் ஏழு வாரங்கள் தொடர்ந்து மேற்கொண்டால் உங்களுடைய திருமணம் சார்ந்த முயற்சி வெற்றி பெறுவதையும் இனிமையான குடும்ப வாழ்க்கை அமைவதையும் அனுபவத்தில் காண இயலும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM