எம்மில் பலரும் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அனுபவத்தில் உணர்ந்திருப்போம். வேறு சிலர் பிரைன் அட்டாக் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் திடீரென்று குமட்டலோ வாந்தியோ ஏற்பட்டால் அது குடல் அட்டாக் எனும் பாதிப்பாக இருக்கும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
குடல் அட்டாக் என்றால் எம்முடைய குடல் பகுதிக்கு செல்லும் குருதி ஓட்டம் திடீரென பாரிய அளவில் தடைப்படுவதை குறிப்பிடுகிறது. மருத்துவ மொழியில் இதனை மெசென்ட்ரிக் இஸ்கிமியா என தெரிவிக்கிறார்கள். இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு பாதிப்பை போல், குடலுக்கு குருதியை வழங்கும் ரத்த நாளங்களில் அடைப்பு அல்லது ரத்த உறைவு ஏற்படும் போது இத்தகைய பாதிப்பு நிகழ்வதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
திடீரென்று அதிகரிக்கும் கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம். ஆகியவை இதன் அறிகுறிகள் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதாலும், திசுக்கள் பாதிப்படைவதை தவிர்க்க வேண்டும் என்பதாலும். உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டியதிருக்கும்.
பசியின்மை, மலச்சிக்கல், வாந்தி, வயிற்று வலி, வாயு பிரியாத நிலை ஆகியவை இதன் அறிகுறிகளாக அவதானிக்கலாம். சிலருக்கு இத்தகைய பாதிப்பு எம்முடைய குடல் பகுதிகள் முழுமையாகவும் சிலருக்கு பகுதி அளவாகவும் சிலருக்கு தற்காலிகமானதாகவும் ஏற்படக்கூடும். இவர்களுக்கு வைத்தியர்கள் உடனடியாக உரிய பரிசோதனையை மேற்கொண்டு, பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் தருவர். சிலருக்கு முழுமையான நிவாரணம் பெற சிறிய அளவிலான அறுவை சிகிச்சை அவசியமாகலாம்.

வைத்தியர் ராதாகிருஷ்ணன்
தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM