பிளைதுபாய் விமானத்தில் துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இந்திய விமானி ஸ்மித் மச்சார், அபுதாபியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து அறிந்த அவரது மனைவி சோனல் மச்சார், மும்பையிலிருந்து அபுதாபிக்குச் சென்று கணவரை சந்தித்துள்ளார்.
கணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்தபோது தாம் எவ்வாறு உணர்ந்ததாக செய்தியாளர்கள் கேட்டபோது, தாம் மிகவும் நிலைகுலைந்து போனதாக சோனல் மச்சார் தெரிவித்துள்ளார்.
“நான் மிகவும் நிலைகுலைந்து போனேன். எப்படி எதிர்வினையாற்றுவது என்பதை அறியும் மனநிலையில் நான் இருக்கவில்லை. ஆனால், எனது நண்பர்களும் குடும்பத்தினரும் என்னைச் சுற்றி இருந்ததால், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையை அவர்கள் எனக்கு அளித்தனர். மிக விரைவிலேயே அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் எனக்கு தகவல்கள் வரத் தொடங்கின,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கணவரை சந்தித்ததாகவும், அவர் உரிய மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது தமக்கு நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“நான் அவரை சந்தித்தேன். அவர் சிறந்த மருத்துவக் கவனிப்பில் இருப்பது எனக்கு நம்பிக்கையளித்தது. அமீரக வைத்தியர்கள் மற்றும் இராணுவ வைத்தியர்களின் சிறந்த பராமரிப்பில் அவர் உள்ளார்,” என சோனல் மச்சார் தெரிவித்துள்ளார்.
பிளைதுபாய் விமானத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய விமானி ஸ்மித் மச்சார் அபுதாபியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM