உஸ்பெகிஸ்தான் பெண்ணுக்கு பாலியல் சுரண்டல் - முச்சக்கரவண்டி சாரதிக்கு 10ஆண்டுகள் கடூழிய சிறை

Published By: M.Priyanka

03 Oct, 2026 | 11:26 AM
image

போலி வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை வழங்கி உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இலங்கை அழைத்து வந்து, அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்துக்காக, இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி கொழும்பிலுள்ள விடுதியொன்றில் உஸ்பெகிஸ்தான் பெண்ணைப் பாலியல் தொழிலுக்காகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் சட்டமா அதிபரால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இலங்கையில் வசித்து வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 'ஜாஸ்மின்' என்ற பெண் மூலம், அதே நாட்டைச் சேர்ந்த 'ஒக்சானா' என்ற பெண்ணுக்கு மாதம் 1,500 அமெரிக்க டொலர் சம்பளத்தில் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலை வழங்கப்படும் எனப் போலி வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி ஜாஸ்மின் ஏற்பாடு செய்த விமானச் சீட்டு மற்றும் விசா மூலம் அப்பெண் இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, ஜாஸ்மினும் அவரது கணவரான இலங்கை முச்சக்கரவண்டி ஓட்டுநரும் அழைத்துச் சென்று நீர்கொழும்பில் உள்ள வீட்டில் தங்கவைத்துள்ளனர். அன்றைய தினமே அவர் பாலியல் தொழிலுக்காக வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளார்.

தனைத் தொடர்ந்து, வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்படிலொன்றில் அடைத்து வைக்கப்பட்ட அப்பெண்ணின் கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்து, தொடர்பு கொள்ளும் வசதிகளை மறுத்து, அவரது நடமாட்டத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

நிலைமையைத் தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாரைத் தொலைபேசியில் இரகசியமாகத் தொடர்புகொண்டு விபரங்களைக் கூறியுள்ளார். அதன்பின்னர், அவரது தாயார் உஸ்பெகிஸ்தான் பொலிஸில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்  விசாரணைகளை ஆரம்பித்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டுப் பாதுகாப்பான இல்லத்திற்கு மாற்றியது.

விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த போதிலும், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள் உட்பட வலுவான அறிவியல் மற்றும் ஆவணச் சான்றுகள் மூலம் அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபித்தது.

குறிப்பாக, 2020 டிசம்பர் 31 அன்று கொழும்பு விடுதியொன்றில் பெறப்பட்ட பாலியல் சேவைகளுக்காக வாடிக்கையாளர் ஒருவர் செலுத்திய தொகையின் ஒரு பகுதி, ஜாஸ்மினின் கணவரின் தனிப்பட்ட வங்கிப் கணக்கிற்கு மாற்றப்பட்டமை வங்கிப் பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி, அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு குற்றச் செயல் என்றும் சுட்டிக்காட்டினார். அதனடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேருக்கு வழங்கப்பட்டுள்ள கடூழிய சிறை...

2026-10-13 13:49:00
news-image

சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு...

2026-10-13 16:41:45
news-image

இலங்கையின் குடும்பக் கடன்கள் அதிகரிப்பு –...

2026-10-13 15:01:45
news-image

வங்காள விரிகுடாவில் வளிமண்டலத் தளம்பல்: நாட்டின்...

2026-10-13 22:56:02
news-image

மதத் தலைவர்கள் விவகாரம்: சம்பிக்க ரணவக்க...

2026-10-13 17:29:58
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்...

2026-10-13 15:48:47
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 17:31:45
news-image

இலங்கையில் இணையவழிக் குற்றங்களுக்கு இலக்காகும் சிறுவர்கள்:...

2026-10-13 15:24:54
news-image

ஞானசார தேரர் விவகாரம் ; சிறைச்சாலை ...

2026-10-13 16:49:19
news-image

நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்து எந்தவொரு வெளிநாட்டு...

2026-10-13 21:55:19
news-image

மார்ச் மாதத்தின் பின்னரே நாணய நிதியத்துடனான...

2026-10-13 17:03:22
news-image

தலதா மாளிகை தாக்குதல் குறித்து ஜே.வி.பி...

2026-10-13 17:34:59