நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் பிரத்யேக வழிபாடு..!?

Published By: Digital Desk 2

06 Oct, 2026 | 01:53 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் இணையம் வழியாக இரவு பகல் பாராமல் ஒரே இடத்தில் அமர்ந்து உழைத்து வருகிறார்கள். இதனால் இவர்களுடைய வாழ்க்கை நடைமுறை - உணவுமுறை ஆகியவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இளம் வயதிலேயே விவரிக்க இயலாத நோய் பாதிப்பிற்கு ஆளாகி, அதற்கு அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் நிவாரண சிகிச்சையை ஆயுள் முழுவதும் தொடர்கிறார்கள்.

இந்நிலையில் நாட்பட்ட பாதிப்பிற்கு முழுமையாக நிவாரணம் வழங்கும் பிரத்யேக வழிபாட்டை எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இத்தகைய சூட்சம வழிபாட்டை மேற்கொண்ட பிறகு, சிகிச்சையை தொடர்ந்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தேவையான பொருட்கள்

சுத்தமான மலைத் தேன்

ஒவ்வொரு மாதமும் தவறாமல் இடம்பெறும் திருவாதிரை நட்சத்திர நாளில் உங்களது வீட்டிற்கு அருகே உள்ள சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள லிங்க வடிவ சிவபெருமான்- நடராஜர் மற்றும் பைரவர் ஆகிய மூவரில் ஒருவருக்கு காலை அல்லது உச்சி கால வேளையில் மலைத்தேனால் அபிஷேகம்  செய்திட வேண்டும்.

அதன் போது ருத்ர பாராயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த அபிஷேகம் செய்த தேனை அந்த ஆலயத்தில் இறைத்தொண்டு செய்யும் ஊழியரிடமிருந்து கேட்டு பெற்றுக் கொண்டு, வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். அதனை சிறிதளவு இரவு உறங்கும் முன் அருந்த வேண்டும்.

இதனை தொடர்ந்து மேற்கொண்டால்... உங்களுடைய நாட்பட்ட பாதிப்பு மறையத் தொடங்கி ஆரோக்கியம் மேம்படும். அதே தருணத்தில் இத்தகைய தேன் அபிஷேகத்தை மேற்கொண்ட பிறகு .. அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள தொடங்கினால்... உங்களுக்கான நோய் பாதிப்பிற்கு விரைவில் முழுமையாக நிவாரணம் கிடைக்கும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரே...

2026-10-13 15:58:57
news-image

கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடு...

2026-10-12 13:50:15
news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை

2026-10-10 17:17:58
news-image

ஜாதகத்தை எப்படி? எப்போது? வலிமை படுத்த...

2026-10-09 14:31:28
news-image

பெண் சாபம் - பெண் தோஷம்...

2026-10-08 17:02:16
news-image

செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய...

2026-10-07 16:02:06
news-image

நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-06 15:54:16
news-image

பரம்பரை தோஷம் நீங்குவதற்கான எளிய குறிப்பு!?

2026-10-05 13:38:49
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய வழிபாடு

2026-10-03 16:04:39
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-10-06 13:53:52
news-image

குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2026-10-01 16:28:18
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் -...

2026-10-01 14:17:53