நுண் இரத்த நாள அடைப்பை கண்டறியும் நவீன பரிசோதனை

Published By: Digital Desk 2

02 Oct, 2026 | 03:16 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் இளம் வயதிலேயே இதயம் மற்றும் ரத்த நாளங்கள் சம்பந்தமான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இத்தகைய பாதிப்பை தொடக்க நிலையில் துல்லியமாக அவதானிப்பதற்கு இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை எனும் நவீன பரிசோதனை முறை அறிமுகமாகி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய நவீன பரிசோதனையில் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களின் உள்பகுதியை மிகத் துல்லியமாக அவதானிக்க இயலும். மேலும் இத்தகைய பரிசோதனையில் நுண்ணிய ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் எதனால் ஏற்பட்டிருக்கிறது? என்பதனையும், அடைப்பு அல்லாமல் நாளங்கள் சுருக்கமடைந்து இருந்தாலும்... அவை உள்பகுதியில் சுருங்கி இருந்தாலும்... இத்தகைய பரிசோதனையின் மூலம் துல்லியமாக அவதானிக்க இயலும்.

மேலும் இதய நாளங்கள் - ரத்த நாளங்களில் அடைப்பு பாதிப்பை சீராக்குவதற்காக ஸ்டென்ட்டை பொருத்தும் போது.. அவை போதுமான அளவில்... துல்லியமான இடத்தில்... பொருத்தப்பட்டிருக்கிறதா? என்பதனை உறுதிப்படுத்துவதற்கும் இத்தகைய இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை உதவுகிறது என வைத்தியர்கள் விவரித்துள்ளனர்.‌

இத்தகைய பரிசோதனையின் போது ரத்த நாளங்களின் முழுமையான உருவப் படத்தை உருவாக்க ஒலி அலைகள் பாவிக்கப்படுகிறது. இத்தகைய பரிசோதனை மாரடைப்பு- பக்கவாதம் - நுரையீரல் பாதிப்பு- போன்ற உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அபாய நிலைகளை துல்லியமாக அவதானித்து, உடனடியாக முழுமையான நிவாரண சிகிச்சையை வழங்குவதற்கு உதவுகிறது.

வைத்தியர் சைதன்யா
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இடுப்பு மறுசீரமைப்பு சத்திர சிகிச்சை

2026-10-13 17:31:05
news-image

ஒஸ்டியோட் ஒஸ்டியோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-10-12 13:59:47
news-image

இதய நோயாளிகளுக்கு நிவாரணம் தரும் நவீன...

2026-10-10 17:17:40
news-image

உலக மனநல தினம் இன்று

2026-10-10 16:59:52
news-image

நான் கேரியஸ் லீஸன்ஸ் எனும் பற்களில்...

2026-10-09 14:31:07
news-image

டெஸ்டிகுலர் டோர்ஷன் எனும் விதைப் பையில்...

2026-10-08 17:25:50
news-image

பீடியாட்ரிக் ஓர்தோபீடிக் கிளப்ஃபுட் எனும் பிறவி...

2026-10-07 16:28:17
news-image

செல்லுலிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-10-06 15:58:41
news-image

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி கண் பாதிப்பு...

2026-10-05 12:16:44
news-image

குடல் அட்டாக் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2026-10-03 16:01:44
news-image

நுண் இரத்த நாள அடைப்பை கண்டறியும்...

2026-10-02 15:16:19
news-image

ரைனோஸ்கிளிரோமா எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-10-01 16:18:03