2026 ஆம் ஆண்டுக்கான TAEKWONDO (ரெக்வொண்டோ) போட்டியில் மன்னார் மாணவர்கள் இருவர் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினர்

Published By: Vishnu

02 Oct, 2026 | 06:06 AM
image

பாடசாலைகளுக்கு இடையிலான 2026 ஆம் ஆண்டுக்கான TAEKWONDO ( ரெக்வொண்டோ )போட்டியில் கலந்து கொண்ட மடு கல்வி வலயத்தை சேர்ந்த இரு மாணவர்கள் 2 ஆம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

பண்டாரவளை உள்ளக விளையாட்டு மைதானத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (30) இறுதி போட்டி இடம் பெற்றது.

இதன்போது 20 வயதிற்குட்பட்டோருக்கான   87 கிலோ எடை கொண்ட போட்டியில் பெரிய பண்டிவிரிச்சான் ம.வி பாடசாலை மாணவன் .கு.டினோசன் சில்வா கலந்து கொண்டு 2 ஆம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

மேலும் 57 தொடக்கம் 62 கிலோ எடை கொண்ட போட்டியில் அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவி கே.எழில் அரசி கலந்து கொண்ட 2 ஆம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.

குறித்த இரு மாணவர்களும் வெள்ளி பதக்கத்தை பெற்று மன்னார் மாவட்டத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமையை ஏற்படுத்தி உள்ளனர்.

குறித்த இரு மாணவர்களின் பயிற்றுவிப்பாளராக யோ.விஸ்னுகரன் பங்கு பெற்றி வெற்றிக்கு துணையாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் அபராம்; இலங்கைக்கு...

2026-10-13 23:00:18
news-image

இலங்கைக்கு 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-10-13 20:51:46
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட பங்களாதேஷ் -...

2026-10-13 21:20:14
news-image

ரென்ஷோ துடுப்பாட்டத்திலும் ஹேஸ்ல்வூட் பந்துவீச்சிலும் அசத்தல்;...

2026-10-13 19:30:55
news-image

பாகிஸ்தானுடன் கடைசி ரி20 போட்டி இன்று;...

2026-10-13 16:26:49
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இலங்கை...

2026-10-13 13:20:47
news-image

இடியுடன் கூடிய கடும் மழையினால் தடைப்பட்டது...

2026-10-12 23:09:25
news-image

சீ ஹோக்ஸ் - கலம்போ எவ்சி...

2026-10-12 13:50:03
news-image

உலக மனநல தினம்: ‘ஆன் மை...

2026-10-12 04:09:26
news-image

இரண்டாவது சர்வதேச ரி20இல் இலங்கையை துவம்சம்...

2026-10-11 22:49:53
news-image

புளூ ஸ்டாரின் கடும் சவாலுக்கு மத்தியில்...

2026-10-11 21:02:58
news-image

றினோன் கழகத்தை வீழ்த்தி வரலாறு படைத்தது...

2026-10-11 16:06:32